சுசீ லீக்ஸ் இந்த பெயர் சில வருடங்களுக்கு முன்னரே பரபரப்பை கிளப்பிய ஒன்று. இப்படியெல்லாம் நடந்திருக்குமா என எண்ணிபார்த்து முடிக்கும் முன்னரே சுசித்ராவின் மனம் திறந்த பேட்டி. அது அவரின் ஆதங்கமா?, அல்லது ஆழ்மனக்குமுறலா?, அல்லது தவறா என விவாதங்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டுத்தான் வருகிறது.
தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர், அவருக்கு தனுஷுடன் ஒரே அறையில் என்ன வேலை?. நடிகைகள் சிலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என சுசித்ரா வைத்துள்ள குற்றச்சாட்டுகளும், வார்த்தைகளும் வலைதளத்தை சில நாட்களாக ஆக்கிரமித்துத்தான் வருகிறது.
பலரும் நமெக்கென்ன என தங்களது வேலையை பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்திலேம் ஒரு சில பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துக்களை ஓப்பனாக சொல்லியும் வருகின்றார்கள். தயாரிப்பாளர் ராஜன் என்றாலே எந்த உண்மையை, எந்த இடத்தில் தேங்காய் உடைப்பதை போலே போட்டு உடைப்பார் என ஆர்வமாக காத்துனிர்க வைப்பவர் தான்.
சுசித்ரா கிளப்பியுள்ள சூறாவளிக்கு கருத்து சொல்லியிருக்கும் அவரோ நடிகைகள் மது குடிப்பது எல்லாம் நடக்கத்தான் செய்கிறது சினிமா உலகத்தில் ஆனால் இதையெல்லாம் ஏன் இப்படி பொது வெளிக்குகொண்டுவருகிறார் என ஆதங்கப்பட்டு அறிவுரை சொல்லியிருக்கிறார். மது விஷயத்தை ஒத்துகொள்ளும் விதமாக பேசிய அவர் சுசித்ரா சொல்லியிருந்த போதை பொருட்கள் எல்லாம் இங்கே கிடையாது எனவுல் சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி இந்த நேரத்தில் சுசித்ராவிற்கு தேவை அறுதலும் மருத்துவரின் ஆலோசனையும் தான். பேட்டிகள் அல்ல. மருத்துவ உதவிகளை பெறச்சொல்வது அவரின் மன நிலை குறித்த சந்தேகத்தின் பேரில் அல்ல. அவரது மனக்காயத்திற்கான மருந்தாகவே என்பதனையும் சேர்த்துள்ளார்.