cinema news
சரத்குமாரை பாராட்டி தள்ளிய தயாரிப்பாளர் ராஜன்!…அடடே அவரா?…இது புதுசா இருக்கே!…
மேடைகள், பொது நிகழ்ச்சிகள் என்று பாராமல், தன் மனதில் பட்ட கருத்துக்களையும், தான் சந்தித்த நிகழ்வுகளையும், அனுபத்தையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். தயாரிப்பாளர் ராஜன். நேர்மையானவர் என்பதால் இவரிடம் இருந்து பாரட்டு பெறுவது கடினம் என்று கூட சொல்லப்படும். இப்படிப்பட்டவர் தனது தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியத்தை சொல்லியிருப்பார்.
வில்லனாக வாழ்க்கையை துவங்கி, புகழ் கொண்ட கதாநாயகர்களில் ஒருவராக வீர நடை போட்டு, தற்பொழுது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருபவர் சரத்குமார். இவர் நடித்த படங்கள் ஏராளமானவை “வெள்ளிவிழா” கண்டது உண்டு. “சூரியவம்சம்”, “நாட்டாமை” “நட்புக்காக”,”சேரன் பாண்டியன்” என அடுக்கிக் கொண்டே போகலாம்.
மறைந்த ‘கேப்டன்’, ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்துடன் “கேப்டன் பிரபாகரன்” படத்தில் நடித்திருந்தார். இவரது நல்ல மனம் குறித்து தயாரிப்பாளர் ராஜன் கூறியிருந்தார்.
சரத்குமாரை வைத்து “தங்கமான தங்கச்சி” என ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.
ராஜன் அந்த படத்தின் சம்பளமாக சரத்குமாருக்கு பேசிய தொகை ஒன்றரை லட்ச ரூபாய். குறித்த நாட்கள் தாண்டியும் படப்பிடிப்பு சென்றதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ‘கமிட்’ ஆகியிருந்ததால் ராஜனின் படம் தாமதம் ஆனதாம்.
இது குறித்து ராஜன் சரத்குமாரிடம் கேட்ட போது என் சூழ்நிலை தான் உங்களுக்கு தெரியாதா? என சொன்னாராம். அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகையில் பத்தாயிரம் ரூபாயை ராஜன் பாக்கியாக கொடுக்க வேண்டியதாக இருந்தாம்.
ஆனால் சரத்குமாரோ படப்பிடிப்பு தள்ளிப்போக தான் காரணமானதால் அந்த பத்தாயிரம் ரூபாய் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். தன்னால் யாரும் சிரமப்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் சரத்குமார் என ராஜன் மனம் திறந்திருந்தார்.