vijay
vijay

இந்தா உனக்குத்தான் வாய்ப்பு!…விஜய் கொடுக்கும் ஜாக்பாட்…அதிர்ஷ்டம் யாருக்கு?……

கட்சித்தலைவர் விஜய் தனது சினிமா பயணத்தை முடிவிற்கு கொண்டு வந்து விடலாம் என யோச்சித்து வர, அவரது ரசிகர்களோ சினிமா, அரசியல் என  இரண்டிலும் இருங்கள்  ‘அண்ணா’ன்னு  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு வேளை விஜய் நினைத்த மாதிரி மக்கள் பணியில் மட்டுமே முழுமூச்சாக  இறங்வேண்டும் என  முடிவு எடுத்தார் என்றால் அவருடைய கடைசி படம் எதுவாக  இருந்தாலும் அந்த படம் சும்மா மரண அடியாகத்தான் அவரோட எதிரிகளுக்கு மாறவேண்டும்  என்ற நினைப்பில் தான் தயாராகும்.

ரஸ்யாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் “கோட்” படக்குழு வருகிற 17ம் தேதி இந்தியா திரும்புகின்றதாம். தேர்தல் நடக்கயிருப்பதால் விஜய் வாக்களிக்க வரவேண்டும் என்பதனால் இந்த தேதியில் திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது.  விஜயின் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  எச்.வினோத் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  இந்த படத்தை யார் தயாரிப்பார்? என்ற ஒரு சந்தேகமும் இருந்துதான் வருகிறது. முக்கியமான தயாரிப்பு  நிறுவங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில். “ஆர்.ஆர்.ஆர்” படத்தை தயாரித்த டி.வி.வி.நிறுவனம், விஜய் படத்தை எடுக்கலாம் என தகவல் கசிந்தது. ஏறத்தாழ இந்தக்கூட்டணி தான் என உறுதியாகியும் இருந்தது. ஆனால் தனய்யாவின் அந்த நிறுவனம் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.

அடுத்த படியாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ். ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கலாம் என்ற யூகங்களும் பறந்தது. ‘வலைப்பேக்சு’அந்தணன் சமீபத்தில் இது குறித்த நிலவரத்தை பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்.  ‘செவன் ஸ்டுடியோ’ லலித்குமார் தான் தயாரிக்கப்போகிறார் என அடித்துக்கூறியுள்ளார் அந்தணன்.

lalit vijay
lalit vijay                                                                                                                                                                                                                                                அதனோடு விஜயின் சினிமா பணிகளை கவணித்து வரும் மேலாளருக்கும் இந்த படத்தின் மூலம் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம், அவரும் தயாரிப்பில் இணைவார், அரசியலில் தனது வேலைகளை கவனித்துக்கொள்ள புஸ்ஸிஆனந்த் இருப்பதனால் தன் மேலாளருக்கு வாய்ப்பை வழங்க முடிவு செய்திருக்கலாம். விஜயின் “லியோ” படத்தை தயாரித்த லலித்துடன் மீண்டும் இணைந்தால் அது நிச்சயம் விஜய் சிகர்களுக்கு விருந்தாக்கத்தான் அமையும்.