vaettaiyaatu vilaiyaatu
vaettaiyaatu vilaiyaatu

துட்டு இல்லேன்னா மெட்டு இல்ல…தயாரிப்பாளரிடம் கரார் காட்டிய ஹாரீஸ் ஜெயராஜ்?…பட் அந்த நேர்மை தான் பிடிச்சிருந்ததாம்

.

ஏ.ஆர். ரஹ்மான் சாயலிலயே நவீன மயமான இசை யுக்தியுடன் “மின்னலே” படத்தின் மூலம் தழிழ் திரை உலகின் வாசலை வந்தடைந்தவர் ஹாரீஸ் ஜெயராஜ். மேற்கத்திய இசையின் மெட்டுகளையே அதிகமக கொடுத்து வந்தார்.

இவர் பாடல்களில் பயன்படுத்திய ‘ஓமகசீயா’ ,’ஹசலி ஃபசலி’ போன்ற வரிகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க முடியாமல்
ஸ்காட்லேன்ட் போலீஸே இன்று வரை கஷ்டம் தான் பட்டுக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் அர்த்தம் தெரியாவிட்டாலும் அதையே தினமும் முணங்கி வந்த லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியதே ஹாரீஸின் பலம்.

“காக்க காக்க”, “அந்நியன்”, “கோ”, “கஜினி” என பட கதைகளோடு பிரிக்க முடியாத பாடல்கள். கதை இயக்கத்திற்காக பார்த்தவர்கள், இசை, பாடல்களுக்காகவும் ‘ஒன்ஸ்மோர்’ வந்து படத்தை பார்க்க வைத்த வித்தைக்காரர். இவரின் நேர்மையான குணத்தை பற்றி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு முறை சொல்லியிருந்தார்.

vettaiyatu vilaiyaatu
vettaiyatu vilaiyaatu

கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் அதிகமாக இசையமைத்த இவர். “வேட்டையாடு விளையாடு” படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது மாணிக்கம் நராயணனிடம் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தந்தால் மட்டுமே இசையமைப்பேன் என கராராக சொல்லிவிட்டாராம்.

தன் கருத்தை நேர்மையாக சொல்லுபவர்கள கம்மி சினிமாவில்  எதை சொன்னாலும் சுற்றி, வளைத்து பேசுபவர்கள் மத்தியில் மனதில் பட்டதை பளீச் என சொன்ன ஹாரீஸின் செயல் தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக சொல்லியிருந்தார் மாணிக்கம்.

அதே தனது மகன் திருமண ஏற்பாடுகளை கவணிக்கவும்,தனக்கு உதவுவதற்காக இரண்டு நாட்கள் முன்னரே தனது வேலைகள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு வந்துவர். அந்த அளவு என் மீது அக்கறை கொண்டவர் ஹாரீஸ் ஜெயராஜ்  என நெகிழ்ச்சியாக சொன்னார் மாணிக்கம் நாராயணன்.