cinema news
இதெல்லாம் இளையராஜா கிட்ட எதிர்பார்க்க முடியுமா?…ரஜினி படத்துக்கு பட்டுன்னு ஓகே சொன்ன தயாரிப்பாளர்!…
ரஜினிகாந்த்-சன் பிக்சர்ஸ்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராக போகும் படம் கூலி. இந்த படத்தினுடைய ‘டைட்டில் டீஸர்’ சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இப்படி இருக்கையில், தன்னிடம் கேட்காமல் ‘டிஸ்கோ, டிஸ்கோ’ பாடலை படத்தில் பயன்படுத்தியது குறித்து கேள்வியெழுப்பி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம் இளையராஜா.
இந்த விஷயம் கோலிவுட் வாட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி சர்ச்சைகளை ஒரு புறம் கிளப்பியுள்ளது. இது விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. பிரபல இசயமைப்பாளர் ஒருவர் கூட இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த கேள்வியை தயாரிப்பாளர் மட்டும் தான் கேட்டு உரிமை கோர முடியும் என கருத்து சொல்லி இளையராஜவிற்கு எதிர் கேள்வியும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்ட தன் பின்னனி பற்றிய முக்கியமான தகவலை சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினார் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘கூலி’ என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளலாமா? என கேட்டிருக்கின்றனர்.
ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுகணமே தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் நல்லது தானே, எனக்கு மகிழ்ச்சி தான் என பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் மாணிக்கம் நாராயணன். ரஜினி படத்திற்கு தனது பெயர் பயன்படுவது மகிழ்ச்சியை இன்னும் அதிகரித்துள்ளதாக பெருமித்துடன் சொல்லியிருந்தார்.
சரத்குமார், மீனா நடிப்பில் வெளிவந்த “கூலி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் ரஜினி படத்தினுடைய பெயரை வைப்பதற்கு முதலில் அவரிடம் சம்மதம் கேட்டிருக்கிறார்கள்.