cinema news
பிரஸ் ஷோவில் இம்ப்ரஸ் பண்ணின மகாராஜா!…மரண மாஸ் காட்டியிருக்காரே மக்கள் செல்வன்…
விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போரட்டங்களை கண்டு, அதன் பின்னரே தனக்கான இடத்தை இன்றைய ஹீரோக்களில் மத்தியில் தக்க வைத்துக்கொண்டவர். இவரது படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டி விடுவார், இதைத்தான் இவரது ரசிகர்களும் இவரிடம் விரும்புவது.
“மெரி கிறிஸ்துமஸ்” படத்தின் பிறகு தனது கேரியரில் மிகப்பெரிய ஆர்பாட்டம் இருக்கும் என நினைத்தார் விஜய்சேதுபதி. ஆனால் அது வீன்போனது. படம் எதிர்பார்த்த அளவில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை விஜய்சேதுபதி யோசித்து கூட பார்க்காத பின்னைடவை தந்தது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ளது “மகாராஜா” படம். விஜய்சேதுபதியின் 50வது படம் இது. மம்தா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், ‘பாய்ஸ்’ மணிகண்டன் என ஏராளமானோர் நடித்துள்ளனர். படத்தின் டிரையலரே சுவாரசியமாக இருந்த நிலையில் படம் நாளை வெளிவர உள்ளது “மகாராஜா”.
பத்திரிக்காயாளர்களுக்கான பிரத்யக ஷோ நேற்று நடந்தது. படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக செல்கிறது. இரண்டாம் பாதி அப்படியே நேர் எதிர்மாறாக செல்கிறது.
காணாமல் போகும் லட்சுமியை தேடி அலையும் விஜய்சேதுபதி முடி திருத்துபவராக நடித்திருக்கிறார் படத்தில். யார் அந்த லட்சுமி இது தான் படத்தில் இருக்கும் டுவிஸ்ட்.
அனுராக் கஷ்யாப் படத்தின் வில்லன். தமிழ் சினிமாவில் மிக்ப்பெரிய வெற்றியை கதாநாயகனாக பார்த்து சிற்து காலம் ஆன நிலையில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் மக்கள் செல்வன்.
அவரின் தனித்துவமான நடிப்பிற்காகத்தான் அவரது படத்திற்கு ஆடியன்ஸ் பட்டாளம் அலை மோதும். ஒரு பெரிய காத்திருக்கிறது “மகாராஜா” ரீலீசுக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு நிச்சயம்.