தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியரான கங்கை அமரனின் மகன்களில் ஒருவர் பிரேம்ஜி அமரன். வெங்கட்பிரபுவின் சகோதராரன இவரை அதிகமாக வெங்கட்பிரபுவின் படங்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும்.
விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தில் கூட பிரேம்ஜி அமரன் நடித்துவருவதாக சொல்லப்படுகிறது.
தனது தம்பியின் கேரியரை அந்த அளவு பொத்தி பாதுகாத்து வந்தார் வெங்கட்பிரபு. சமீபத்தில் தம்பியின் திருமணம் குறித்து ரசிகர்ளிடம் விடுத்த கோரிக்கையில் கூட ‘பாகுபலியை கட்டப்பா என் கொன்றார்?’. ‘சொப்பன சுந்தரியை இப்ப யாரு வெச்சிருக்கா?’, இந்த கேள்விக்கு அடுத்த படியாக தனது காதில் விழுந்தது பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்? என சொல்லியிருந்தார்.
ஒருவழியாக எல்லோரும் எதிர்பார்த்தது போல பிரேம்ஜியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருத்தணி முருகன் கோவிலில் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னே இந்துவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினார் பிரேம்ஜி.
நேற்றைய தினம் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சென்னை 600 028 படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழவேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்ததுக்களை தெரிவித்து வருகிறனர்.
எப்படியோ முரட்டு சிங்கிள்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இதுவரை இருந்து வந்து பிரேம்ஜி அமரன் இன்று முதல் கணவனாக மாறிவிட்டார். தமிழகத்தில் இனி முரட்டு சிங்கிள்களை யார் வழி நடத்தப்போகிறார்கள் என்ற கேள்வி எழுத்துவங்கியதுமே பிரேம்ஜி போனால் என்ன அது தான் சிம்பு இருக்காரே என பதில் வரத்துவங்கியுள்ளதாம். ஆனால் பலரின் ஆசை சிம்புவும் இது போல விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனபதாகும்,