cinema news
பிரேம்ஜிக்கு டும்…டும்…டும்!…முடிவுக்கு வரப்போகுதா முரட்டு சிங்கிள் வாழ்க்கை?…
பிரேம்ஜி அமரன் இவரை கங்கை அமரனின் மகன் என்று சொல்வதை விட வெங்கட் பிரபுவின் தம்பி என்று சொன்னால் தான் அதிகம் பேருக்கு தெரியவரும். இருவருக்குமிடையே அப்படி ஒரு பாசம்.
சிவகார்த்திகேயன் கூட நிகழ்ச்சி மேடை ஒன்றில் வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படம் எடுப்பார், ஆனால் அவரது தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என கிண்டலாக.
வேறு இயக்குனர்களின் படத்தில் நடித்ததை விட பிரேம் தனது அண்ணன் படத்திலேயே அதிகமாக நடித்திருக்கிறார்.
அஜீத் நடித்து மெஹா ஹிட்டான “மங்காத்தா”வில் பிரேம்ஜிக்கு அழுத்தமான கேரக்டர் கொடுத்திருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவரும் அதை சரியாக பயன்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் அறிந்த முகமாக மாறிவிட்டார் பிரேம்ஜி. 44 வயதை நெருங்கிவிட்டாலும் இவர் இதுவரை முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த வாழ்விற்கு முடிவு கொடுக்கும் விதாமான ஒரு செய்தி வெளிவந்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வருகிற ஜூன் மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து டும்…டும்…டும்…நடக்கப்போகிறதாம். திருமணத்தை உறுதிப்படுத்தும் விதாமாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதல் இப்போது வைரல் ஆகி வருகிறது.
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா இது பிரேம்ஜி திரையில் பேசியிருந்த வசனங்களில் அதிக பாப்புலர் ஒன்று.முரட்டு சிங்கிளாவே இருந்து எங்களை படங்கள் மூலமா சந்தோஷப்படுத்தினீங்க.
சீக்கிரம் மணமுடிச்சு நல்லாயிருங்க என தங்களது வாழ்த்துக்களை பிரேம்ஜிக்கு அள்ளி குவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.