- Homepage
- cinema news
- முன் அனுமதி பெற வேண்டும்…விஜயகாந்த் விஷயத்தில் பிரேமலதா அதிரடி…
முன் அனுமதி பெற வேண்டும்…விஜயகாந்த் விஷயத்தில் பிரேமலதா அதிரடி…
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவராக எதிர்க் கட்சித்தலைவராக இருந்து மறைந்தவர் விஜயகாந்த். ‘கேப்டன்’, ‘புரட்சிக் கலைஞர்’ என் மக்களால் மன் நிறைவோடு அழைக்கப்பட்டவர் இவர். திரை உலகத்தினரால் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், மனிதாபிமானத்தில் சிறந்து விளங்கியவராகவும் பார்க்கப்பட்டார் இவர்.
கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இவர் இயற்கை எய்தினார். இவரது மறைவு திரை உலகத்தினரை மட்டுமல்லாது, அரசியல்வாதிகள் , சாமனியர்கள் என பலரையும் அதி₹இ அடையச் செய்தது.
விஜயகாந்த்தின் மரணத்திற்கு முன்னரே அவரது மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களது மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மறைந்த விஜயகாந்த்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலமாக சினிமாக்களில் காட்ட முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரமலதா வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் விஜயகாந்த்தை நவீன ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் சினிமாவில் காட்ட முயற்சிப்பவர்கள் இதற்கு தங்களிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என தனது வேண்டுகோளில் சொல்லியிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “கோட்” படத்தில் விஜயகாந்தை இந்த தொழில் நுட்பத்தின் மூலம் திரையில் காட்ட இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கு பிரேமலதாவிடம் முறையான அனுமதி வாங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதுவரை ஏ.ஐ. தொழில் நுட்பத்திற்காக யாரும் தங்களை அனுகவில்லை என திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.