cinema news
விஜய் என் அளவுக்கு கிடையாது!…ஒதுக்கிய ஐஸ்வர்யா ராய்!…பெஸ்ட் ஆக தெரிந்த பிரசாந்த்…
” வைகாசி பொறந்தாச்சு”ல் துவங்கிய பிரசாந்தின் சினிமா வாழ்க்கை மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரான போக்கில் சென்று கொண்டிருந்தது ஒரு காலத்தில். ரஜினி, கமலுக்கு பிறகு அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது இவர் தான் என ஏறத்தாழ மக்கள் முடிவு செய்து வைத்தது போலத்தான் இருந்தது.
இவர் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி வாகை சூடியது. ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே இவருக்கு அதிகமாக இருந்தனர். திடீரென சினிமாவை விட்டு காணாமலே போய்விட்டார் பிரசாந்த். தற்பொழுது விஜயின் “கோஸ்ட்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
“ஜீன்ஸ்” படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை தேர்ந்தெடுத்தார் ஷங்கர். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என ஒரு குழப்பம் நீடித்து வந்தாம். “உலக அழகி” பட்டம் பெற்று புகழின் உச்சியில் ஐஸ்வர்யா ராய் இருந்து வந்த நேரம் அது.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளவட்டங்களான அஜீத், விஜய் பெயர்கள் பரீசீலிகப்பட்டு, அவர்களை பற்றி ஐஸ்வர்யா ராயிடம் தெரிவிக்கப்பட்டது. தன்னை விட இளையவர் போல தோற்றமளிக்கிறார் என சொல்லி விஜயை நிராகரித்து விட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
பிரசாந்த் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நடனம்’, ‘கராத்தே’, ‘கும்ஃபூ’ கற்று வைத்திருந்த பிரசாந்த் தான் தனக்கு சரியான ஜோடியாக இருப்பார் என ஐஸ்வர்யா ராய் கருத்து சொல்ல, அவரே கதாநாயாகன் ஆனார்.
ஆனால் விஜய்க்கோ, ஐஸ்வர்யா ராய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை இருந்து வந்ததாம். அது இன்று வரை நிறைவேறாமலே உள்ளது. அஜீத், விஜய், தனுஷ் இவர்களை விட தகுதி அதிகம் கொண்டவர் பிரசாந்த் தானாம். இந்த தகவல்களை எல்லாம் பிரபல விமர்சகர் சபீதா ஜோசப் சொல்லியிருந்தார்,