தனிக்கட்சி தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் – அதிரடி அறிவிப்பு

254

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்திலும், பேட்டிகளிலும் தொடர்ந்து கூறி வருகிறார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பிரகாஷ்ராஜ் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ்ராஜை விட 2 லட்சம் வாக்குகள் அதிகம் வாங்கி மகத்தான வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தான் தனிக்கட்சி தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் கருத்து தெரிவித்தபோது “பெங்களூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனையை அறிந்துள்ளேன். மதவாத கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்தேன். ஆனால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் முடிவை ஏற்கிறேன். சுயேட்சையாக நின்றதால் மக்களிடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனவே, விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  மோடி தலைமையிலான அமைச்சரவை - யார் யாருக்கு இடம்? பட்டியல் இதோ!