நடன கலைஞராக அறிமுமாகி, நடன இயக்குனராக உயர்ந்து பின்னர் கதாநாயகனாக நடித்து படங்களை இயக்கியும் வருகிறார் பிரபு தேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பட்டம் சூட்டப்பட்டவர். இவரின் “பேட்ட-ராப்” படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் வேலைகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அனியை எதிர்கொண்டது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்தது இந்த போட்டி. ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை குறையாத விறுவிறுப்போடு போட்டி நடந்தது. அரை இறுதி வரை வெற்றிகராமாக சென்றாலும் இறுதி போட்டியில் தோல்வி அடைவது இந்திய அணியின் தொடர் கதையாக இருந்து வந்தது.
கடைசி நிமிடம் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லால் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது இப்போது வரை. திரை துறை பிரபகலங்களையும் இந்திய அணியின் இந்த வெற்றி மகிழ்ச்சியடையச்செய்துள்ளது. இறுதிப்போட்டியை டிவியில் பார்த்த பிரபு தேவாவும் ஆரவாரத்தோடு இந்த வெற்றியை கொண்டாடினார்.
போட்டி முடிந்த அடுத்த நொடியே மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டு இந்தியாவுக்கு உலக் கோப்பை என உணர்ச்சிபொங்க கத்தினார். அதோடு டிவி திரையில் தெரிந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு முத்தங்களை வாரி வழங்கினார். பிரபு தேவாவின் இந்த வெற்றிக் கொண்டாட்ட வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.