sivaji
sivaji

அனாதை என்று சொல்லி வாய்ப்பு கேட்ட சிவாஜி கணேசன்…பசி கொடுமையால் சொன்ன பொய்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் பல்கலைக்கழகம், வளரும் நடிகர்கள் நடிப்பு என்றால் என்ன என்று இவரது பாவனைகளை பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது.

“பராசக்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். வசனங்கள் பேசிய விதத்தை பார்த்து, இது இவரது  அறிமுக படம் தானா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு ஏற்ற முகபாவனைகளோடும் நடித்த  ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருந்தார்.

எத்தனை பக்க வசனங்களாக இருந்தாலும் அதை  அப்படியே உள்வாங்கி அந்த வார்த்தைகளுக்கு தேவையான ஏற்ற, இறக்கங்களை கொடுத்தும், உச்சரித்தும் பேசி அசத்துவதில் வல்லவராக இருந்தவர் சிவாஜி கணேசன்.

sivaji
sivaji

இவரின் தந்தை தேசியவாதி என்கின்ற காரணத்தினால், அவர் அடிக்கடி கைது செய்யப்படுவாராம் இளமை காலத்தில் சிவாஜி கணேசன் வீட்டின் அருகே “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகம் அடிக்கடி போட்டு காண்பிப்பார்களாம்.

இதைப் பார்த்து, பாரத்து தான் தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததாக சிவாஜி கணேசன் அவருடைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.

அவர் தந்தையின் மீதான கைது நடவடிக்கையால் அவரது குடும்பம் வறுமையில் வாடியதாகவும். நாடகத்தின் மூலமே சினிமா துறைக்கு சென்றதாகவும் சொல்லியிருப்பார்.

நாடகங்களில் வாய்ப்பு கிடைக்க தனக்கு தாய்,தந்தை கிடையாது. தான் ஒரு அனாதை என பொய் சொல்லி  கேட்டாராம். இவரின் அசத்தலான நடிப்பு சினிமாவில்  இவருக்கென ஒரு தனி சாம்ராஜியத்தை உருவாக்கி அதில் மன்னராக திகழும் அளவிற்கு அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.