cinema news
பீஸ்ட் வேஸ்ட் ஆனா என்ன?…சூப்பராக்க சுப்புராஜ் இருக்காறே!…ஹெட்டிங்கான ஹெக்டே!…
இயக்குனர் மிஷ்கின் “முகமூடி” படத்தில் அறிமுகப்படுத்தியவர் பூஜா ஹெக்டே. இவர் நடித்த தமிழ் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் ரசிகர்களை கவர்ந்தவராகவே இருக்கிறார் இவர். தெலுங்கில் இவர் நடனமாடிய ‘புட்ட பொம்மா’ பாடல் இவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது.
நெல்சன் விஜயை இயக்கிய “பீஸ்ட்” படத்தில் கதாநாயகி இவர்தான். விஜயுடன் நடித்து விட்டோம் இனி தமிழில் ஒரு ரவுண்டு வந்து விடலாம் என நினைத்திருந்திருக்கலாம் இவர். ஆனால் யாரும் எதிர்பார்க்கவில்லை “பீஸ்ட்” படம் தமிழ் சினிமாவில் வேஸ்ட் என பெயர் வாங்கும் என.
அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமலே இருந்தவருக்கு இப்போது அடித்துள்ளது ஜாக்பாட். சூர்யாவின் 44வது படத்தில் இவர் நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்திற்காக விகிடன் சினிமா விருதுகளில் 7 விருதுகளை சமீபத்தில் பெற்றுள்ள குஷியில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கடந்த் இரண்டு வருடங்களாக சூர்யா- சுப்புராஜ் இணைய உள்ள படத்திற்கான டிஸ்கஷன் போய் கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சொல்லியருக்கிறார்.
இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தில் பூஜா ஹெக்டே இணைக்கப்பட்டுள்ளார். ரஜினிக்கே மறுவாழ்வு தரும் படியாக “பேட்ட” படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜால், பூஜா ஹெக்டேவிற்கு பெரிய திருப்புமுனை தமிழ் சினிமாவில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“விடுதலை”இரண்டாம் பாகம் முடிவடைந்த பின்னை சூர்யாவுடன் “வாடிவாசல்” படத்தில் இணையப்போவதாக ஏற்கனவே வெற்றிமாறான் அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கூட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா.
இன்றைய இளம் இயக்குனர்களில் மிக முக்கியமாக பார்க்கபடுபவர் கார்த்திக் சுப்புராஜ். இப்படி புகழின் சிகரம் தொட்ட இருவருடன் இணைய பூஜாவிற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.