cinema news
எம்.எஸ்.பாஸ்கருக்கு நேர் எதிராக இருக்கும் பொன்னம்பலம்…வில்லனா இருந்தாகும் வேற லெவல் பேச்சு தான் போங்க!…
நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவின் கொடூர வில்லன்களில் ஒருவர். கரடுமுரடான இவரது நடிப்பை பார்த்தாலே பயம் தானாக வந்து விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை சிறுநீரக பாதிப்பால் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து வந்தார். இப்போது முற்றிலுமாக குணமடைந்து விட்டதாக அவரே சொல்லியிருந்தார்.
நோயின் கொடுமையான பிடியிலிருந்து விடுபட்ட பொன்னம்பலம் வாழ்க்கைல சில கசப்பான விஷயங்கள் நடந்துடுச்சி. அதனால நடிக்க முடியல. இப்போ ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன்.
மறுபடியும் நடிக்க உண்டான அத்தனை தகுதியும் இப்போ இருக்கு. சீக்கிரம் என்ன சினிமாவில பார்ப்பீங்கன்னு நம்பிக்கையோட சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜயகாந்தி, அஜீத், சத்யராஜ், சரத்குமார் என முக்கிய நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் இவர். “நாட்டாமை”, “முத்து”, “முகவரி” படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
ரசிகர்கள் தான் எனக்கு கடவுள்ன்னு சொல்லி ரசிகர்களுக்கு தனது நன்றியையும் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழா ஒன்றில் பேசிய எம்.எஸ். பாஸ்கர் படம் நல்ல இல்லேன்னா அத அப்படியே விட்டுடுங்க, அத விட்டுட்டு அந்த படத்துக்கு போகாதீங்கன்னு கருத்து சொல்லாதீங்க.
நீங்க கொடுக்குற நூற்றி இருபது ரூபாயை வச்சிட்டு கோட்டை கெட்ட முடியாதுன்னு சொல்ல நெட்டிசன்கள்லாம் டென்ஷனாகிட்டாங்க. பாஸ்கர் பேசியதுக்கு கடுமையான கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது.
ஆனால் பொன்னம்பலம் ரசிகர்கள் தான் தனக்கு கடவுள்னு சொன்னது பாஸ்கர் பேசியதுக்கு பரிகாரம் செய்தது போல மாறிஇருக்கிறது. வில்லனாக நடிச்சிருந்தாலும் கொடுக்க வேண்டிய மரியாதையையும், தன்னோட நன்றியையும் சரியா வெளிப்படுத்திய பொன்னம்பலத்திற்கு பாராட்டுக்கள் குவிகிறதாம்.