cinema news
கொலை மிரட்டல் விடுத்தார் – நடிகர் கருணாகரன் மீது இயக்குனர் புகார்
நடிகர் கருணாகரன் தன்னை மிரட்டியதாக பொதுநலன கருதி இயக்குனர் சியோன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ம் தேதி வெளியான படம் ‘பொதுநலன் கருதி’. கந்துவட்டியை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கருணாகரன், அருண் ஆதிக், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சியோன் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், கருணாகாரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சியோன் புகார் அளித்துள்ளார். படத்தின் புரமோஷன் விழாவிற்கு வராதது குறித்து கருணாகரனிடம் பேசிய போது அவர் தன்னை மிரட்டியதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.