cinema news
டபுள் ட்ரீட் கொடுக்கப்போற தளபதி?…பட்டைய கிளப்ப போறாராம் பிறந்த நாள் அன்னைக்கு!…
ஜுன்- 22 விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க கூடிய நாள். விஜய் படம் வெளியாவதை விட வெறித்தனமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விடுவார்கள் இந்த தேதியில் வருடம் தோறும். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி குவியலைக்கொட்டித்தீர்த்து விடுவார்கள் அந்த தினத்தில்.
இந்த தினம் இந்த ஆண்டு கடந்தவையை விட அதிகமாக முக்கியத்துவம் பெரும் என் எதிர்பார்க்கலாம். காரணம் நடிகராக மட்டுமே இருந்து வந்த அவர்களின் விஜயண்ணா கட்சித்தலைவராகிவிட்டாரே அதனாலும்.
தங்களின் விருப்ப நாயகன் பிறந்த தினம் என்றாலே பொங்கி எழுவார்கள் ரசிகர்கள், அதையும் தாண்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வேறயே இப்போது அதனாலும்.
“கோட்” படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் விஜய் பிறந்த தினமான ஜுன்-22ம் தேதி “துப்பாக்கி” படம் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. அதையே ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்த நிலையில் இப்போது மற்றொரு படம் அதே தேதியில் வெளியாக தயாராக இருக்கிறது என்ற செய்தியும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கசிந்து வருகிறது.
விஜயின் வெற்றி படமான “போக்கிரி” படத்தினை விஜய் பிறந்த தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டு வருகின்றார்களாம். பிரபு தேவா இயக்கிரயிருந்த “போக்கிரி” படத்தில் அசின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சம்மர் ஸ்பெஷலாக “கில்லி” ரீ-ரிலீஸ் செய்யப்பட அதனை திருவிழா போல மாற்றி விட்ட விஜய் ரசிகர்கள் அவர்களின் விஜயண்ணா பிறந்த தினத்தில் வெளியாகும் படங்களுக்கு சாதாரன ஒப்பனிங்கா கொடுத்து விடுவார்கள்.
வெறித்தனமான வரவேற்பே தான் இருக்கும் நிச்சயமாக என இப்போதே சொல்லி விடலாமோ?. அதிலும் “போக்கிரி” விஜயின் மெஹா ஹிட் படமும் கூடவே.