“மஞ்சுமெல் பாய்ஸ்” இது மலையாள படமா? இல்கை தமிழ் படமான்னு நினைக்கிற அளவுக்கு வெறித்தனமான ஹிட் ஆகியது. படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது இளையராஜா இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த வெளியான “குணா” படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் தான்.
2கே கிட்ஸ் எல்லாம் இந்த பாடலை கொண்டாடி தீர்த்து விட்டனர். பள்ளி, கல்லூரி விழாக்களிலும், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன வீடியோக்கள் என “குணா” பாடல் வெளிவந்த நேரத்தில் அடைந்த ஹிட்டை விட இப்போது தான் அதிகமான வரவேற்பை பெற்றிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரின் வாயில் முனுமுனுக்கப்பட்ட பாடலாக இருந்தும் வந்தது.

பாடல் வந்தாலும் வந்தது படத்தில் குணா தனது காதலி அபிராமியுடன் இருந்து வந்த குகை முதற்கொண்டு தனிப்பட்ட சுற்றுலா தளமாக மாறி விட்டது. பாட்டும், குகையும் தான் சில நாட்களுக்கு முன்னர் வரை ட்ரெண்ட்.
“குணா” படத்தினை சந்தானபாரதி இயக்கியிருந்தார். “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தில் ‘கண்மணி’ பாடலை கேட்டதையடுத்து படத்தினை மீண்டும் பார்த்தே ஆக வேண்டும் அதுவும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் அதனால் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது ரசிகர்களிடமிருந்து.
ரசிகர்களின் இந்த நியாயமான கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்ட “குணா” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரீ-ரிலீஸ் பண்ண சம்மத்தித்துள்ளதாம். விரைவில் “குணா” படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம். அனேகமாக ஜூலை மாதம் 21ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கபபடுகிறது.