cinema news
அம்மாடியோவ் வெக்கத்த பாருங்க புது பொண்ணுக்கு!…ஆக்சன் கிங் மகளா இது…வெளியான திருமண போட்டோ!..
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமவில் முன்னனி நடிகராக மாறியவர் அர்ஜூன். அதிரடி சண்டை படங்களில் அதிகம் நடித்ததால் இவர் ‘ஆக்சன் கிங்’ என்று அழைக்கபடுகிறார்.
இவரது மகள் ஐஸ்வர்யா “பட்டத்து யானை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு சினிமா பெய்ய அளவில் கைகொடுக்கவில்லை.
இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா பல படங்களில் நடித்துள்ளவர். காமெடியன்களுக்கு தமிழ் சினிமாவில் பற்றாக்குறை இருக்கும் இந்த நேரத்திலும் சரி, விவேக், வடிவேலு, சந்தானம் என காமெடியன்கள் படையெடுத்து வந்த நேரத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழ் சினிமாவில் தன்னை இணைத்துக்கொண்டவர் தான். “அதாகப்பட்டது மகாஜனங்களே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் கண்டவர். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மததோடு உமாபதி – ஐஸ்வர்யாவின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. திரையுலக முன்னனிகள். முக்கியஸ்தர்கள். வி.ஐ.பிக்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணக்கோலத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவின் வெட்கத்தோடு வெளிவந்துள்ள இந்த போட்டோ காண்போரை மகிழ்ச்செய்தது. மணமக்கள் பல்லாண்டு வாழ அர்ஜூன், தம்பி ராமையாவின் ரசிகர்கள் மனமார வாழ்த்தி வருகின்றனர்.
அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் இப்போது. இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “மங்காத்தா” படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து. அஜீத் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படமாக மாறியது. அர்ஜூன் லியோ படத்தில் விஜயுடன் நடித்திருந்தார்.