பெரியார் சர்ச்சை குறித்து மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

65

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் செல்வராகவன் இயக்கிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்றுவெளியானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியானது பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது ஒரு புறம்  இருந்தாலும்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபத்திரத்திற்கு ராம்சே என பெயர் சூட்டியது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

தந்தை பெரியாரை மறைமுகமாகத் தாக்கும் வகையில் உள்நோக்கும் கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பெரியாரின் ஆதரவாளர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் செல்வராகவன் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் இப்பெயர் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு செல்வராகவன் பதிலளிக்கையில் பெரியாரைக் குறிப்பிட்டே அப்பெயர் வைக்கப்பட்டது’ என்கிற பாணியில் பதிலளித்தார் சமூக வலைதளங்களில் இந்த நிலையில் இந்த விசயங்கள் சமூக வலைதளத்தில்  பிரச்சினையாக்கப்பட்டது

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து செல்வராகவன் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக்காட்டிய பின்புதான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.நெறியாளர் கேட்ட கேள்வி முழுமையாக இல்லை. என செல்வராகவன் கூறியுள்ளார்.

பாருங்க:  கர்ப்பினி பெண்ணுக்கு கொரோனா தொற்று! பிறந்த குழந்தையின் நிலை!
Previous articleரிலீசுக்கு தாமதமாகும் டாக்டர் திரைப்படம்
Next articleநடனம் ஆடி உடற்பயிற்சி செய்த சமந்தா வைரல் வீடியோ