Connect with us

செவ்வாழைலாம் நமக்கு செட் ஆகாது!…பட்டாசு பாலுன்னா ஓ.கே…பதில் சொல்ல தவிர்த்த பசுபதி…

cinema news

செவ்வாழைலாம் நமக்கு செட் ஆகாது!…பட்டாசு பாலுன்னா ஓ.கே…பதில் சொல்ல தவிர்த்த பசுபதி…

“குசேலன்” படத்தில் ரஜினிக்கு நண்பன், கமல்ஹாசனுடன் “விருமாண்டி”, “மும்பை எக்ஸ்பிரஸ்” இப்படி வில்லன், குணச்சித்திர வேடம் என எது கிடைத்தாலும் நடிப்பில் அசத்தி வருபவர் பசுபதி. “திருப்பாச்சி” படத்தில் விஜய்யை எதிர்த்து பட்டாசு பாலுவாக நடித்த வரும் இவரே.

“பருத்தி வீரன்” பட தமிழ் சினிமா ரசிகர்களை அதிர வைத்து. கதைக்களம், திரைக்கதை, இசை என எல்லாமே பிரம்மிக்கும் விதமாகத்தான் இருந்தது. பிரியா மணி, கார்த்தி இவர்களின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. அமீரின் இயக்கத்தில் வந்த “பருத்தி வீரன்”ல் எவராலும் மறக்க முடியாத கதாப்பாத்திரம் தான் ‘செவ்வாழை’.

saravanan

saravanan

சித்தப்பு என கார்த்தி அழைத்து வந்தாலும் சரவணனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வைத்தது இந்த கதாப்பாத்திரம். எதை பற்றிய கவலையும் இல்லாதவர்களாக இருவரும்  படத்தில் நடித்திருந்தனர்.

கதாநாயகனாக சரவணன் நடித்த போது கூட இந்த அளவு பெயரை பெற்றிருப்பாரா? என யோசித்திருக்க முடியாது. அந்த அளவு பேசப்பட்டது செவ்வாழை கேரக்டர்.

இதில் நடிக்க அமீர் பசுபதியிடம் தான் பேசினாராம். அப்போது பிஸியாக இருந்த பசுபதி அமீருக்கு சரியான பதிலே சொல்லவில்லையாம். படத்தை திட்டமிட்டபடி ஆரம்பித்தே ஆக வேண்டும் என்பதால் சரவணனை நடிக்க வைத்தாராம் அமீர்.

இது சரவணனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. சரியான வாய்ப்பு அமையாமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த சரவணன் ரஜினி “ஜெயிலர்” படத்தில் நடிக்கும் அளவிற்கு முன்னேறியதற்கு “பருத்தி வீரன்”, ‘செவ்வாழை’ கூட காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. அந்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சரவணன் “பருத்திவீரன்” படத்தில்.

More in cinema news

To Top