இளையராஜா 75 நிகழ்ச்சியிலிருந்து ஏன் வெளியேறினேன்? – பார்த்திபன் பேட்டி

350

தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் பதவியிலிருந்தும், இளையராஜா 75 நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறியது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனை தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக விஷால் நியமித்தார். அதேபோல், இளையராஜா 75 நிகழ்ச்சியை இயக்கும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார். ஆனால், நிகழ்ச்சிக்கு நடப்பதற்கு முதல் நாள் தனது பதவியை பார்த்திபன் ராஜினாமா செய்தார். இளையராஜா 75 நிகழ்ச்சிக்கும் அவர் வரவில்லை. இது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், இதுபற்றி பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பார்த்திபன் விஷால் தரப்பு தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தியதாக கூறியுள்ளார். இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக தான் கொடுத்த எந்த அறிவுரைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விஷாலின் வலது கரமான நந்தா மற்றும் ரமணா ஆகியோர் என்னை மதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு நான் வேண்டாம் என விஷாலிடம் கூறினர். பல இடங்களில் என் மூக்கை உடைத்தனர். எனவே, இந்த நிகழ்ச்சிக்கு நான் எதற்கு? என எனக்கு தோன்றியது. எனவேதான வெளியேறினேன்.. எனக்கு என்ன பிரச்சனை என விஷால் கேட்கவில்லை. என்னை அழைத்து அவர் பேசவே இல்லை ” எனவும் பார்த்திபன் புகார் கூறியுள்ளார்.

பாருங்க:  வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது - ரஜினி பேட்டி