Latest News
ஒரு நாள் ஃபுல்லா அதுலயே போயிட்டு!…அஜீத்துடன் மீண்டும் இணைய நினைக்கும் பிரபலம்?…
அஜீத்குமார் இன்று கோலிவுட்டின் மாஸ் ஹீரோ. அவரை பற்றிய செய்தி எது வந்தாலும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அது டிரெண்ட் ஆகிவிடும். அந்த அளவில் ஃபேன் பேக்-அப் கொண்டிருப்பவர் அவர். தற்போது “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” படங்களில் நடித்து வருகிறார்.
“விடாமுயற்சி” தீபாவளிக்கும், “குட் பேட் அக்லி” பொங்கலுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் தனது கேரியரில் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். விஜய், கார்த்திக், சத்யராஜ், பார்த்திபன் இவர்களெல்லாம் அந்த லிஸ்டிற்குள் வந்து விடுவார்கள்.
ராஜகுமாரன் இயக்கத்தில் தேவயானி ஹீரோயினாக நடித்த படம் “நீ வருவாய் என”. டபுள் ஹீரோ சப்ஜெக்டான இதில் அஜீத் – பார்த்திபன் இருவரும் நடித்தனர். அஜீத்துடன் நடித்த அனுபவத்தை பற்றி சொல்லியிருந்த பார்த்திபன்.
ஓரே ஒரு நாள் மட்டும் தான் இருவரும் சந்தித்தார்களாம். அதுவும் கை குலுக்குவது, ரோஜாப்பூ கொடுப்பது என அதிலேயே நேரம் போகிவிட்டதாம். அதுவும் போட்டோ ஷூட்டிற்காக தான் அன்று ஒரே இடத்தில் சந்திக்க முடிந்ததாம்.
அஜீத்துடன் மீண்டும் இணைந்து நடிக்க தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், நல்ல ஸ்கிரிப்ட் அமையும், அதற்காக காத்துகொண்டிருப்பதாகவும் பார்த்திபன் சொல்லியிருந்தார்.
அஜீத் – பார்த்திபன் இருவரும் உன்னைக் கொடு என்னை தருவேன் படத்திலும் இணைந்து நடித்தனர். அஜீத்துக்கு சிம்ரனும், பார்த்திபனுக்கு சுகன்யாவும் ஜோடிகளாக நடித்திருந்தனர். “நீ வருவாய் என” மெகா ஹிட் ஆனது, ” உன்னைக் கொடு என்னை தருவேன்” அட்டர் ப்ளாப் ஆனது.
“நீ வருவாய் என” படத்திற்கு பிறகே இயக்குனர் ராஜகுமாரனும், தேவயானியும் திருமணம் முடித்து கொண்டார்கள்.