தன்னுடைய உள்ளே வெளியே படத்தை மீண்டும் வேறு கோணத்தில் ‘அயோக்யா’ எடுத்து அதில் என்னையே நடிக்க வைத்துவிட்டனர் என இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் டெம்பர். இப்படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா உருவாகியுள்ளது. இதில், விஷால் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கிய ‘உள்ளே வெளியே’ படத்தை கொஞ்சம் மாற்றித்தான் தெலுங்கில் டெம்பர் எடுத்திருந்தனர். தற்போது தமிழில் விஷால் நடிக்க ‘அயோக்யா’ வாக உருவாகியுள்ளது. இதில் என்ன வேடிக்கை எனில், இதில் பார்த்திபனும் நடித்துள்ளார் என்பதுதான். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் “94-ல் வெளியான என் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!
அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு’அ-தனம்’?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்” என பதிவிட்டுள்ளார்