cinema news
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – டிரெய்லர் வீடியோ
நடிகரும், இயக்குனருமான பார்த்தின் நடித்து இயக்கியுள்ள ஒத்தசெருப்பு படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் தற்போது அவர் மட்டுமே அதாவது ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் திரைப்படமாக ஒத்த செருப்பை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தைன் டிரெய்லர் வீடியோவை நடிகர் கார்த்தி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டிரெய்லர் முழுவதும் ஒரு அறைக்குள் பார்த்திபன் பேசும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ‘குடைக்குள் மழை’ திரைப்படத்தை இதுபோலவே எடுத்திருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. ஒத்த செருப்பு ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.