ஆயோக்யா பட சிக்கல்; இது அயோக்கியத்தனம் – சீறும் ஆர்.பார்த்திபன்!!

428

ஆயோக்யா படம் வெளியாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து அப்படத்தில் நடித்த ஆர்.பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரைக்கு பின் விஷால் நடித்த படம் அயோக்யா. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தெலுங்கில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவானது. வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ஆனால், இப்படம் இன்று இப்படம் வெளியாகவில்லை. இதனால் முன்பதிவு செய்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் “ வெளியீடு கடைசி நிமிட  இடையூறுகளால் தள்ளிவிடப்படுவது அயோக்கிய’த்தனம்!

தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளச்சலுக்கு அளவே இருக்காது! வெல்வர் விரைவில்” என கருத்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  சிம்புவுடன் மீண்டும் இணையும் நடிகை ஹன்சிகா?