Latest News
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காரணத்திற்காக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத்தொடர்ந்து ருத்ரதாண்டவம், திரௌபதி, பாகசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி அவ்வபோது மாட்டிக் கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கின்றார்.
இவர் பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இருக்கும் இவரின் இல்லத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜி யை கைது செய்து இருக்கிறார்கள். மோகன் ஜி கைது தொடர்பாக போலீஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை இருப்பினும் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தகவலை பகிர்ந்து இருக்கின்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாமிர்தம் தொடர்பாக மோகன் ஜி கூறிய கருத்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.