Connect with us

மறக்கமுடியாத பிந்துகோஷ்!… நடிப்பில் மட்டுமல்ல அல்ல அந்த விஷயத்திலும் இவர் பெஸ்டாமே?…

binthugosh

cinema news

மறக்கமுடியாத பிந்துகோஷ்!… நடிப்பில் மட்டுமல்ல அல்ல அந்த விஷயத்திலும் இவர் பெஸ்டாமே?…

தனது குழந்தைத்தனமான நடிப்பினால் 80,90 கால ரசிகர்களை கவர்ந்தவர் பிந்துகோஷ். விமலா என்பதே இவரது இயற்பெயராகும். குண்டான உடல்வாகினை கொண்டிருந்தாலும் அதனையே தனக்கு சாதகமாக்கி தன் பின்னாலும் ரசிகர்களை சுற்றி வரச்செய்தவர்.

“கோழி கூவுது” படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார் என்பது தெரியப்படுத்தப்பட்ட உண்மை. கங்கை அமரனின் இயக்கத்தில் வந்த இந்த படத்தில் பிரபு நடித்திருந்தார். “கோழி கூவுது”  படமே இவரின் முதல் படம் என சொல்லப்பட்டாலும், “களத்தூர் கண்னம்மா” படத்தின் வரும் ‘எல்லோரும் நலம் வாழ’ என்ற பாடலில் நடனக்குழுவில் ஒருவராக நடனமாடியிருந்தார்.

bindhu

bindu

கதாநாயகிகளின் தோழி, காமெடியன்களுக்கு ஜோடி என அந்த நாட்களில் தமிழ் சினிமாவிலிருந்து தவிர்க்க முடியாதவராக இருந்துவந்தவர். “தூங்காதே தம்பி தூங்காதே” படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும். “விடுதலை” படத்தில் ரஜினியுடனும் நடித்து இருக்கிறார். “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இதே போல விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், மோகன் என அப்போதைய முன்னனிகளின் படங்களில் நடித்து வந்தவர், தற்போது வயது முதுமையின் காரணமாக சினிமாவிலிருந்து விலகியே நிற்கிறார். இவரது மகன்கள் டோலிவுட்டில் நடன இயக்குனர்களாக இருந்து வருகின்றனர்.

இப்படி தனது தோற்றத்தின் மாறுபாட்டை கூட பெரிதாக நினைக்காமல், தனது முயற் சியாலும் திறமையாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவரினுடைய மற்றொரு சிரப்பம்சம் என்னவென்றால் இவர் ஒரு நடன இயக்குனராகும். பிந்துகோஷை இன்று பலர் மறந்திருந்தாலும் இவரின் நடிப்பால் இவரை ரசித்த  சிலரும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றார்கள்.

More in cinema news

To Top