சிவசேனா கட்சியில் இணையும் பிரபல நடிகை

சிவசேனா கட்சியில் இணையும் பிரபல நடிகை

தமிழில் கடந்த 1995ல் வந்த படம் ரங்கீலா இந்த படம் ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் இருப்பினும் ரங்கீலாவையும் அதில் நடித்த ஊர்மிளாவையும் ரசிகர்கள் ரசித்தனர்.

அதன் பின் கமல் நடித்த இந்தியன் படத்திலும் ஊர்மிளா நடித்திருந்தார் . மேலும் பல ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் ஊர்மிளா.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ஊர்மிளா மதோங்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி வெற்றி பெற்று எம்.பி.யாகிவிட்டார். இந்நிலையில் ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி விட்டார்.

இப்போது புதியதாக சிவசேனா கட்சியில் இணைய உள்ளதாக கூறியுள்ளார். இன்று, முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கேரயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.