rajini sathyaraj
rajini sathyaraj

என்னம்மா கண்ணு சௌக்கியமா?…மீண்டும் மோதிக்கொள்ள போகிறார்களா ரஜினி சத்யராஜ்?…

வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சத்யராஜ். ரஜினி,கமல்,விஜயகாந்த் படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை பயமுறுத்தியவர். நாளடைவில் கதாநாயகனாக மாறிவிட்டார். கதாநாயகனாக கலகலப்பாக வலம் வந்தார். இவர் பெயரை சொல்ல வைத்த படங்கள் “அமைதிப்படை”, “வில்லாதி வில்லன்”, “தாய்மாமன்”, “வால்டர் வெற்றிவேல்” போன்றவை இவரின் பெயரை சொல்லும்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் “மிஸ்டர் பாரத்” படத்தில் வில்லனாக நடித்தார் சத்யராஜ். படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே திரையில் நடந்த மோதல் பேசப்பட்டது. ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ என இருவரும் மாறி மாறி தங்களை கேட்டுக் கொண்ட வசனம் பாடலாக கூட அந்த படத்தில் வந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து ரஜினி நடிக்கவிருக்கும் “கூலி” படத்தில் சத்யராஜை வில்லனாக முயற்சிகள் நடந்து வருகிறதாம். கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்கலாம் என்கின்ற எண்ணத்தில் இருந்து வந்த சத்யராஜுக்கு லோகேஷ் கனகராஜின் ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் அவர் சம்மதித்து விட்டதாக ஒரு செய்தி தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறது.

rajini sathyaraj
rajini sathyaraj

அதனால் மீண்டும் ரஜினியும் சத்யராஜும் திரையில் மோதிக்கொள்ள தயாராகி வருகிறார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த “சிவாஜி”யில் முதன் முதலில் வில்லனாக சுமனுக்கு பதிலாக சத்யராஜிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். நான் நடிக்க தயாராக இருக்கிறேன் அதுபோல ரஜினிகாந்த் என்னுடைய படத்தில் வில்லனாக நடிப்பாரா? என ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

ஒருவேளை அவர் அன்று கேட்டது போல ரஜினி அடுத்த படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க சம்மதித்து விட்டாரா?, அதனால் தான் சத்யராஜ் லோகேஷ் கனகராஜுக்கு ஓ.கே சொல்லி இருப்பார் போல என யூகங்கள் தற்போது கிளம்பி உள்ளது.