Latest News
டானுடன் டான்ஸ் ஆட ரெடியாகும் ராஷ்மிகா மந்தனா?…பட்டைய கிளப்ப போறாரா பாஸ்?…
“வாரிசு” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது துறுதுறுப்பான நடிப்பால் தமிழ் சினிமா நெஞ்சங்களை கவர்ந்தவர். தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர்.
இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் என சொல்லப்படும் அளவிற்கு தான் இவருக்கான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த “புஷ்பா” இவரை இந்திய முழுவதும் ஃபேமஸ் ஆக்கியது.
“புஷ்பா – 2” படம் விரைவில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இவர் நடித்து வரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் சொல்லிக் கொள்ளும் படியான ஹிட்டுகளை இதுவரை கொடுக்கவில்லை என்பதுவே ஆகும்.
“கோட்” படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவுடன் தனது 25வது படத்தில் இணைய உள்ளார் சிவா. இந்தாண்டு இறுதியில் இதன் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் அமரனுக்கு அடுத்து சிவா நடிக்க இருக்கும் 24வது படத்தை பற்றிய நியூஸ் ஒன்று கசிந்துள்ளது.
“டான்” படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி தான் இதனை இயக்கப்போகிறார். படத்தில் சிவாவிற்கு பேர்ராக நடிக்க ராஷ்மிகா மந்தனா கமிட் செய்யப்பட்டுள்ளாரம்.
எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கப் போகிறார். “டான்” படத்தை போலவே தனது அடுத்த படத்தின் பெயரும் இரண்டு எழுத்தில் தான் இருக்கும் வேண்டும் அது தான் செண்டிமெண்ட்டாக ஒர்க்-அவுட் ஆகும் என நினைத்த சிபிசக்கரவர்த்தி படத்திற்கு “பாஸ்” என பெயர் வைக்க முடிவு செய்துள்ளாரம். இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என் பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.