cinema news
இன்னும் ரெண்டே நாள் தான்…டூயட் பாடப்போறாரா இந்தியன் 2 தாத்தா?…
கமல்ஹாசன் – ஷங்கர் இருவரும் இணைந்துள்ள படம் இந்தியன்-2. அடுத்த மாதம் படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூரவமாக சமீபத்தில் அறிவித்திருந்ததும் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல வரவற்பு கிடைத்துள்ளது.
சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், நெடுமுடி வேணு என ஏராளமான நடிகர்கள் புடை சூழ வெள்ளித்திரையில் விரைவில் வலம் வர காத்திருக்கிறார் இந்தியன்-2. இந்தியன் முதல் பாகத்தின் வெற்றி தமிழகமே அறிந்த ஒன்றுதான்.சொல்லப்போனால் அதன் கதையும், காட்சிகளும் தமிழ் சினிமாவை அதிர வைத்தது.
இந்தியன் தாத்தாவாக வந்திருந்த கமல் மிரட்டியிருந்தார் நடிப்பில். வசூலையும் அள்ளிக்குவித்தது இந்த படம். அதே கமல்-ஷங்கர் கூட்டணி என்பதால் இந்தியன்-2க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இப்போது வரை.
இன்னிலையில் படத்தின் இரண்டாவது லிரிக்கல் பாடல் வீடியோ வருகின்ற 29ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சித்தார்த்-ரகுல் பிரீத் சிங் இருவரின் டூயட் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. எது எப்படியோ கமல் ரசிகர்களுக்கு அதுவும் குறிப்பாக இந்தியன் தாத்தாவின் ரசிகர்களுக்கு நாளை மறு நாள் காத்திருக்குறது மிகப்பெரிய அப்டேட் ஒன்று.
பாகம் இரண்டு இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தால் அது நிச்சயமாக இன்றைய 2கே கிட்ஸ் கூட கவர்ந்துவிடும். அதோடு மட்டுமல்லாமல் இதுவரை முதல் பாகத்தை பார்த்திருக்காதவர்களை கூட அதனை பார்க்க தூண்டிவிடும். இதனால் இந்தியன் ரீ-ரீலீஸ் செய்ய வாய்ப்புகள் கூட அதிகமாக இருப்பதாக தான் பார்கப்படுகிறது.