cinema news
ஸாரி நான் ரொம்ப பிசி!…பேக் அப் சொன்ன காளமாடன் பட கதாநாயகி?…
துருவ்விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் தயா, நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் துவக்கப்பட்டுள்ள படம் “பைசன் காளமாடன்”. நேற்று படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. துருவ்விக்ரமிற்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனையை தரும் என்ற பேச்சுக்கள் இப்பொழுதே துவங்கியுமுள்ளது.
“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் அறிமுகமாகி “கர்ணன்”, “மாமன்னன்” என தொடர்ச்சியாக முன்னனிகளை வைத்து படத்து இயக்கி பரபரப்பானவர் மாரி செல்வராஜ். ரஜினியை வைத்து “கபாலி”, “காலா” படங்களை இயக்கி தொடர்ந்து தயாரிப்பாளராக மாறியுள்ள பா.ரஞ்சித் “பைசன்” படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார்.
தென் தமிழகத்தை சேர்ந்தவர் மாரி செல்வராஜ். படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் துவங்கி உள்ளது. 60 நாட்கள் இந்த படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். துருவ்விக்ரமுக்கு இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். அனுபமா பரமேஸ்வரன் ஒரு நாயகி, தர்ஷனா ராஜேந்திரனை இன்னொரு கதாநாயகியாக்க திட்டமிட்டிருந்தார்களாம்.
60 நாள் சூட்டிங் தொடர்ச்சியாக நடக்க இருப்பதால் தர்ஷனாவிடம் மொத்தமாக கால்ஷீட் கேட்டு உள்ளார்கள். இப்படி மொத்தமாக என்னால் டைம் ஒதுக்க முடியாது, நான் ரொம்ப பிஸி அதனால் நான் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என சொல்லி படத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.
இதற்கிடையில் “கர்ணன்” ரஜிஷாவை இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். நேற்றுதான் படத்தினுடைய பெயர் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. அதற்குள் நாயகி மாற்றப்படவேண்டிய நிலைமை வந்து விட்டதாம். குறித்த தேதியில் படத்தை முடிக்க வேண்டும் என்பதனால் இந்த மாற்றம் என ‘வலைப்பேச்சு’ அந்தணன் தெரிவித்துள்ளார்.