96 படத்தில் தனது பட பாடல்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டதற்கு இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். குறிப்பாக, விஜய்சேதுபதி – திரிஷா இணைந்து நடித்த 96 படத்தில், சிறு வயது த்ரிஷா கதாபாத்திரம் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகளில் இளையராஜா பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளையராஜா ‘இது தவறான விஷயம். அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் என் இசையை ஏன் பயன்படுத்த வேண்டும்? படத்தின் இசையமைப்பாளரே அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசைமைக்க முடியாதா? இது ஆண்மை இல்லா தனம்” என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா ஆணவமாக பேசுவதாக அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், 80களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்கள் ஹிந்தி பாடல்களை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டது எனக்கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த பாடலின் வீடியோவையும் வெளியிட்டு இது காப்பி இல்லையா? இது மட்டும் ஆண்மைத்தனமா? எனக்கேள்வி எழுப்பி வருகின்றனர்.