Connect with us

நாக்-அவுட் செஞ்ச நஸ்ரியா…நயன்தாரா…மறுபடியும் ராஜா ராணி ஆவாங்களா?…

Nayanthara Nazriya

Latest News

நாக்-அவுட் செஞ்ச நஸ்ரியா…நயன்தாரா…மறுபடியும் ராஜா ராணி ஆவாங்களா?…

அட்லியை வேற லெவல் இயக்குனராக மாற்றிய படம் “ராஜா ராணி”. படத்தை அவர் எடுத்திருந்த விதம் அந்த நேரத்தில் காதலர்களை அதிகமாக கவர்ந்திழுத்தது. படம் தாருமாறு ஹிட் ஆனது. ஆர்யா – ஜெய் இவர்கள் இருவரின் மார்க்கெட்டை உயர்த்தி விட்ட படம் இது என கூட சொல்லலாம்.

ஜெய் – நயன் தாரா காதல் இரு பக்கம் நயன் தாராவை பார்த்து பம்மும் ஜெய். அவரின் அப்பாவித்தனத்தை கடுமையாக ரசிப்பார் நயன். இன்னொரு பக்கம் ஆர்யா – நஸ்ரியா.

படத்தில் இந்த இரண்டு ஜோடிகளும் சீட்டை விட்டு நகர விடாத அளவில் நடித்திருப்பர். சந்தானத்தின் காமெடி பின்னி எடுக்க படத்தின் ஒவ்வொரு சீனும் சூப்பராகத்தான் இருந்தது.

திருமணம் முடித்து விபத்தில் தனது காதல் மனைவியை பலி கொடுத்த ஆர்யா, தனது எதிர்காலத்தை தீர்மாணித்து நயன்தாராவின் காதலை இழக்கும் ஜெய். இந்த சோகத்தில் வாழும் நயன்தாரா.

காதல் வாழ்க்கையை இழந்த ஆர்யா – நயன் இருவரும் சந்தர்ப்பத்தால் ஜோடிகளாகி விடுவார்கள். இடைவெளியோடு வாழும் இருவரும் எப்படி மனம் ஒத்து போவார்கள் என்பதை சொல்லியது “ராஜா ராணி” படத்தின் க்ளைமேக்ஸ்.

படத்தில் நடித்த ஹீரோயின்ஸ் நயன்தாரா – நஸ்ரியா மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அது நடக்கவில்லை.

nayan nazriya

nayan nazriya

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து இந்த இருவரும் ஒன்றாக இணைந்த போட்டோவை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஃபஹத் பாசில், விக்னேஷ் சிவன் நஸ்ரியா நயன் தாரா நாலு பேரும் சேர்ந்து எடுத்துள்ள பிக்கையும் அப்லோட் செய்திருக்கிறார் நஸ்ரியா.

More in Latest News

To Top