நயன்தாரா பற்றி அவ்வப்போது எதாவது செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரின் வீடு இருக்கும் இடத்தில் அக்கம் பக்கத்தினருடன் நடந்த சர்ச்சைகள் குறித்த செய்திகள் பிரபலம் ஒருவர் சொல்லி தெரய வந்தது.
விக்னேஷ் சிவன் இரு பக்கம் “எல்.ஐ.சி.” பட வேலைகளில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது தீபாவளி ரிலீஸாக “எல்.ஐ.சி.” யை மாற்றிக்காட்ட வேண்டும் என்று.
நயன்தாரா நடிக்கவிருந்த மலையாள படத்தில் வேறு ஒரு கதாநாயகி கமிட் ஆகி விட்டதாக சொல்லபடுகிறது. தமிழில் எடுத்து வந்த சமீபத்திய படங்கள் எல்லாம் ஊத்திக்கொண்டது.
பிரபல தயாரிப்பாளரின் உறவினை வைத்து எடுத்த “ஜோஷ்வா” படம் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை.

இப்படி தனது படங்கள் எல்லாமே தொடர் தோல்வியை தமிழில் பெற்று வருவதை நினைத்த கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது கேரளா பக்கம் சென்று விட்டார். இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் திரைக்கு பின்னாலேயே பார்க்கப்பட்டவர், இப்போது அதிகமாக திரையிலேயே பார்க்க முடிகிறது.
இவர் இயக்கயிருக்கும் மலையாள படத்தில் தான் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை அவருக்கு பதிலாக சமந்தா கமிட் செய்யப்பட்டுள்ளாராம்.
நயன்தாரா தவிர்த்து விட்டாரா? அல்லது கௌதம் கதாநாயகியை மாற்றி விட்டாரா? எனவெல்லாம் தெரியாது ஆனால் இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக சமந்தா தான் நடிக்கிறார்.
கௌதம் தனது பட ஷூட்டிங்கை வெளி நாடுகளில் தான் அதிகமாக ஷூட் பண்ணுவார். இதனால் கூட நயன்தாரா படத்திலிருந்து விலகியிருக்கலாம் என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’அந்தணன் சொல்லியிருக்கிறார்.