ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
பேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு அரசியல் படம் எனவும், நாற்காலி என பெயரிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், நாற்காலி தனது அடுத்த படம் அல்ல என முருகதாஸ் கூறியிருந்தார்.
ரஜினிக்கு இப்படம் 166வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்துக்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஆனால், அப்படத்தில் ஜோதிகாவிற்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. அதன்பின், சிவாஜி படத்தில் தொடக்க பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். எனவே, முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாவதன் மூலம் ஒரு முழுபடத்தில் ரஜினியுடன் நடித்த திருப்தி நயனுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.