cinema news
நவராத்திரி திரைப்படம் ரீமேக் ஆகிறதா
1964ல் ஏ.பிநாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நவராத்திரி. இதில் 9 விதமான வேடத்தில் நடிகர் திலகம் நடித்து இருப்பார். நாடக கலைஞர், கொள்ளைக்காரன், டாக்டர் என 9 வேடத்தில் சிவாஜி இப்படத்தில் நடித்தார் உடன் நடிகையர் திலகம் சாவித்ரி இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் புதிய வடிவில் மீண்டும் வரும் என தெரிகிறது.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி இவையே நவரசம் குறித்து முன்னோர்களின் கருத்து.
நவரசம் குறித்த கதைகளை இயக்க முன்னணி இயக்குனர்கள் இணையும் ஒரு படம் தயாராக உள்ளது. இதில் ஏராளமான நடிகர் பட்டாளம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. அந்தப்படம் நவராத்திரி போல் இல்லாவிட்டாலும் அந்த கதையை ஒட்டிய சாயல் கொண்டது என தெரியவருகிறது.
மணிரத்னம் ஜெயேந்திரா என்பவருடன் இப்படத்தை தயாரித்து, மணிரத்னம் இயக்குவார் எனவும் தகவல்கள் கசிகின்றன.