cinema news
சாமானியனுக்கு ஜாதகம் சரியில்லையாம்!…சாதகமாக வேண்டிய விஷயம் கூட சறுக்கி விட காரணம் இது தானாமே?…
“மேதை” படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுகளுக்கு பிறகு திரையில் தோன்றிவிட்டார் ராமராஜன். “சாமானியன்” மக்கள் பிரச்சனைக்காக களம் கண்டுள்ளார். வங்கிக்கொள்ளையில் ஈடுபடுகிறார்.அதற்கான காரணம் என்ன என்பதனை சொல்லியிருக்கிறது திரைக்கதை.
ராமராஜனனை ‘பளீச்’சென காட்ட அவருக்கு மேக்-கப் அதிமாக போடப்பட்டிருக்கும் ஒரு காலத்தில் அவர் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்த நேரத்தில். ஆனால் “சாமானியன்’ ல் இவருக்கு மேக்-கப் அதிகமாக இல்லாமல் திரையில் காட்டப்பட்டார். யதார்த்தமான நடிப்பு தான் இவரின் பலம் என்பதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் “சாமானியன்” மூலமாகவும்
ராமராஜன் – நளினி இருவரும் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள். எம்.ஜி.ஆர். தலைமையில் தான் இவர்களின் திருமணம் நடந்தது. திடீரென இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் இருவரின் பிரிவிற்கு காரணம் தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் பேசியிருந்த நளினி இதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறார்.
இருவருக்கும் மனக்கசப்பு என எதுவும் கிடையாதாம், நல்ல புரிதலே இருந்துவந்ததாம். தங்கள் வாரிசுகள் இன்றுவரை இருவர் மீதும் அதிக பாசம் கொண்டவர்களாகத்தான் இருந்தும் வருகின்றார்களாம்.
இப்படி இருக்கையில் விவாகரத்து எதற்காக செய்தார்களாம் தெரியுமா?. இருவரின் ஜாதகத்தின் படி பிரிந்திருந்தால் நல்லது என ஜோதிடர் சொல்லியதாலே இது நடந்ததாம். அது சரி அவர்கள் வாழ்க்கை, அவர்கள் நம்பிக்கை என காரணம் தெரிந்த பிறகு ராமராஜன் ரசிகர்கள் சொல்லிவருவது இதைத்தான்.
அதே போல எப்படி “சாமானியன்” மூலமாக தமிழில் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறாரோ அதே போல் ராமராஜன்-நளினி ‘ப்ரேக்-அப்’ பை முறியடித்து மீண்டும் தம்பதியராக வலம் வர வேண்டும் என்ற தங்களது எண்ணத்தையும் பேசிவருகிறார்கள்.