cinema news
எத்தனை வருஷமானாலும் காமாட்சிக்குத்தான் அந்த முத்தையன்!…. ராமராஜனுக்கு ரூட்டு போடும் நடிகை?…
‘கிராமத்து நாயகன்’ என மக்களால் அழைக்கப்படுபவர் ராமராஜன். நீண்ட நாட்கள் கழித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக “சாமானியன்” படத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்க படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு ராமராஜனின் பெயர் தமிழ் சினிமாவில் மீண்டும் வலம் வரத்துவங்கியுள்ளது.
நடிகை நளினி, ராமராஜன் இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். ராமராஜன் 80களில் பிஸியான ஹீரோவாக இருந்துவந்தார். நளினி மட்டுமென்ன சும்மாவா ஒரே வருடத்தில் 25படங்களுக்கு மேல் நடித்தவர்.
நிற்கக்கூட நேரமில்லாமல் படுபிஸியாக காணப்பட்டவர். 1987ல் ராமராஜன்-நளினி இருவருக்கும் திருமணம் நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில் தான் இவர்களது திருமணம் நடந்தது. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் இவர்களுக்கு. இருவரும் இரட்டையர்கள். பதிமூன்று வருடங்கள் இருவரும் தம்பதியர்களாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தங்களின் விவகாரத்தை அறிவித்தனர்.
இதற்கான காரணம் பல வருடங்களாக தெரியாமலேயே இருந்தாலும், நளினி அந்த ரகசியத்தை உடைத்துவிட்டார் தனது பேட்டியின் வாயிலாக. ஜாதகமே இருவரின் பிரிவிற்கு காரணம் என்றார். ராமராஜனுக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை உண்டாம். இருவரும் இணைந்திருந்தால் அது குழந்தைகளுக்கு ஆகாத ஒன்றாகிவிடும் என ஜோதிடர் கணித்து சொன்னதால் தான் இருவரும் மனமுகந்து பிரிந்தார்களாம்.
சாஸ்திரத்திற்காகத்தான் இந்த பிரிவே தவிர, முழு மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது என்பதை நளினி தெளிவுபடுத்தினார். அதோடு எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் ராமராஜனே தனக்கு கணவராக வரவேண்டும் என்பதே தனது வேண்டுதல் எனவும் சொல்லியுள்ளார்.
ராமராஜனின் வெற்றிப்படங்களில் ஒன்றான “கரகாட்டக்காரன்”ல் காமாட்சி கனகாவை பார்த்து முத்தையன் ராமராஜன் என்ன நடந்தாலும் நீ தான் எனக்கு மனைவியென சொல்லும் வசனத்தை போல நளினி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த காமாட்சிக்கு தான் அந்த முத்தையன் என்பது போல சொல்லியிருப்பதாக நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.
“சாமானியன்” மூலமாக திரைக்கு மீண்டு(ம்) வந்திருக்கும் ராமராஜனின் மணவாழ்க்கையும் புத்துண்ர்வு பெற வேண்டும், நளினி சொன்னது போல இருவரும் இந்த ஜென்மத்திலும் மகிழ்ச்சியாக வாழ் வேண்டும் எனவும் பேசப்பட்டு வருகிறது கோலிவுட் வட்டாரத்தில்.