cinema news
அசால்ட்டா சொன்ன மேக்கப் மேன்!..அசந்து போய் பார்த்த நாகேஷ்?…
நகைச்சுவை என்பது சாதாரண விஷயம் அல்ல திரையில். ஒரு மனிதனை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் தான். ஆனால் இதில் கற்று தேர்ந்தவர்களே தமிழ் சினிமாவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து பல ஆண்டுகளாக தங்களுக்கான இடத்தை உறுதி செய்து மனதில் குடியிருந்து வருகின்றார்கள்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகரான நாகேஷ் ஒரு முறை சீரியஸான நேரத்தில் நடந்த டைமிங் காமெடியை பற்றி பேசியிருந்தார். ஷூட்டிங்கின் நடுவே அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களாம். பேய் மழை பெய்ததாம், மழையுடன் சூறைக்காற்றும் வேகமாக வீசியதாம். அப்பொழுது அருகே இருந்த கட்டிடத்தின் மேலே இருந்த கூரை காற்றடித்த வேகத்தில் பறந்து வந்து நாகேஷுக்கு மிக அருகில் பலத்த சத்தத்துடன் விழுந்ததாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம் நாகேஷ். நல்லவேளையாக அங்கிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லைக். நாகேஷ் அருகே இருந்த சூளைமேடு என்ற மேக்கப் மேன் என் வீட்டுக்கு நான் கூரை போடணும்னு நினைச்சிருந்தேன், ஆனா பாருங்க அது என் பக்கம் விழாம, அது கூட இருக்குற இடம் தேடிப்போய் விழுந்திருக்கு என டைமிங்கில் சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
அவ்வளவு சீரியஸான நேரத்தில் கூட எல்லோரும் தங்களை மறந்து சிரிக்கும் அளவில் ஒரு ஒரு காமெடியை சொன்ன அவரின் திறமையை சொல்லி வியந்தார். சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் நடிகர்களால் கூட அந்த நேரத்தில் இப்படி சொல்லி சிரிக்க வைத்திருக்க முடியாது. திறமை எங்கே, எவருக்குள் ஒளிந்திருக்கும் என தெரியாது என்றார்.