“இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தினுடைய விழா ஒன்றில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், வீ.எஸ்.ராகவன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். வயதில் முதியவர்களே அவர்களிடம் எப்படி பேசுவது?, என்ன பேசுவது? என்று தெரியாமல் அங்கு இருந்த இளசுகளின் கூட்டம் நைசாக அவர்களிடமிருந்து ஜகா வாங்கி வெளியேறியதாம்.
அவர்கள் இருவரும் தனியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் ஏதாவது அவர்களிடம் பேச வேண்டும் என அவரிடம் சென்று பேசி இருக்கிறார் இளவரசு. அப்பொழுது நிகழ்காலத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் பழைய விஷயங்களை நினைத்து பார்க்க வேண்டும் என்று சொல்வார்களே அது உண்மையா? என நாகேஷிடம் கருத்து கேட்டு இருக்கிறார் இளவரசு.

உன் கையில் எத்தனை படங்கள் இருக்கிறது என இளவரசுவிடம் நாகேஷ் கேள்வி கேட்டிருக்கிறார் நாகேஷ். ஆஹா தேவையில்லாத ஒரு கேள்வியை கேட்டுவிட்டோமோ என நினைக்கவைத்ததாம் அவரின் அந்த கேள்வி.
இத்தனை படங்கள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் இளவரசு. இன்னைக்கு எனக்கு வேலையே இல்ல, கையில் படங்களும் கிடையாது. நான் பழசை நினைச்சுக்கிட்டு “திருவிளையாடல்” தருமியாகவும், “தில்லானா மோகனாம்பாள்” வைத்தியாகவும், “சர்வர் சுந்தரம்” படத்தின் சுந்தராமாகவும் நினைத்து இருந்தால் நான் உன்னுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.
அதனால் பழைய விஷயங்களை மறக்கப்பழகு. அப்போது தான் புதிய சிந்தனைகள் உருவாகும். அதுவே உன்னை மேம்படுத்தும் என இளவரசு கேட்ட கேள்விக்கான பதிலை அறிவுரை கலந்து சொல்லியிருக்கிறார். இப்படி நாகேஷ் சொல்லுவார் என தான் எதிர்பார்க்கவேயில்லையாம். ஆனாலும் அவரின் அனுபவம் அந்த பதிலின் மூலம் தெரிந்ததாக சொல்லியிடுந்தார் இளவரசு.