Latest News
நாகார்ஜுனாவை ஃபாலோ பண்ணுங்க தனுஷ்…ஐடியா கொடுக்கும் நெட்டிசன்கள்?….
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தான் சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். ஏர்போர்டில் அவரை காண வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை நாகார்ஜூனாவின் பாதுகாவலர் தள்ளிவிட அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோ தான் அது, நெட்டிசன்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியது என்றே சொல்லலாம்.
காரணம் நிலை தடுமாறி அவர் கீழே விழும் நிலைக்கு சென்றதை கண்டு கொள்ளாமல் நாகார்ஜூனா சென்றது தான் நெட்டிசன்களின் கோபத்தை உச்சத்திற்கே கொண்டு சென்றதற்கான காரணம்.
இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவ, அதன் சூடு அமர்வதற்குள், இதே மாதிரியான அடுத்த வீடியோ ஒன்று வெளியானது.
அதில் நாகர்ஜூனா என்றால் இதில் தனுஷ், பீச்சில் வாக்கிங் சென்ற தனுஷை பார்க்க ஆர்வமாக ஓடி வந்த ரசிகரை அவரின் பாதுகாவலர் பிடித்து இழுக்க அவர் கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோ தான் வைரலாக பரவி வருவது.
நாகார்ஜூன் ஏர்போர்ட் விஷயத்தில் பாதிப்பிற்குள்ளான அந்த நபரை அதே ஏர்போர்ட்டிற்கு மீண்டும் சென்று சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து அவரிடம் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த நபரிடம் மண்ணிப்பு கேட்டிருக்கிறார்.
அதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அந்த விமான நிலைய ஊழியருடன் இணைந்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். எர்போர்ட் சென்று தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட நபரை சந்தித்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இப்படி பட்ட நேரத்தில் தான் நெட்டிசன் களின் கோபப்பார்வை தனுஷின் மீது விழுந்துள்ளது. தனுஷ் ஏன் இன்னும் இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.