இசைஞானி இளையராஜா இவருடைய பாடல்களை எவ்வளவு மென்மையாக இருக்குமோ அதற்கு நேர் எதிர்மாறாக தான் இவருடைய இயற் குணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சற்று கோபக்காரராக எல்லாரின் கண்களுக்கும் தெரியக்கூடியவராக தான் இருப்பதாக அவரை பற்றி பல செய்திகள் வந்த வண்ணமே இருக்கும் அவ்வப்போது.
இளையராஜா தன் மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே சொல்லிவிடுவார் அது மேடை என்றும் கூட பாராமல். இதனால் இவர் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியுள்ளார்.
பல நேரங்களில் இவரது செய்தியாளர்கள் சந்திப்பும் கூட சர்ச்சையாகியும் உள்ளது. பேசும் பொருளாக இவரின் வார்த்தைகள் மாறியமைந்ததும் உண்டு. இவை எல்லாம் பற்றி இளையராஜாவே தனது பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
தன் மீது கொண்டுள்ள அதிகப்படியான அன்பினாலே ரசிகர்கள் தன்னுடைய கோபத்தை பொறுத்து போயிருக்கிறார்கள். தன்னுடைய டார்ச்சர், கோபம். எரிச்சல் எல்லாத்தையும் தாங்கி நிற்கின்ற ரசிக பெருமக்களை பாராட்டியுள்ளார்.

மக்களின் மனம் தான் உண்மையான இசை கருவி என்றும் அதை மீட்பவன் அவர் என்றும் சொல்லியிருக்கிறார். அது போல மட்டுமல்லாமல் சூழ்நிலையால் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் குழந்தை தன்மையை இழந்துவிட்டதாக பேசியிருந்தார்.
குழந்தை ஒரு பாடலைக் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். பாடல் பிடித்திருந்தால் அதற்கு ஏற்ற விதத்தில் அந்த குழந்தை தனது நடவடிக்கைகள மாற்றிக்கொள்ளும்.
ஆனால் பாடல் பிடித்திருந்தாலும் பலர் சூழ்நிலையின் காரணமாக ஒத்துப்போக முடியாமல், கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடப்பட்டார்கள் என வருத்தப்பட்டிருப்பார். இளையராஜா குறித்து பேசிய வாலி, தமிழ்நாடு செய்த தவத்தினால் தான் இளையராஜா போன்ற ஒருவர் கிடைத்துள்ளார் என புகழ்ந்திருப்பார்.