cinema news
அடிமையாய் வாழ்ந்த ஜி.வி பிரகாஷ்?…சொல்ல சொல்ல கேட்காம வச்சு செஞ்ச செல்வ ராகவன்!…
“காதல் கொண்டேன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனுஷின் சகோதரர் செல்வராகவன். “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன” போன்ற படங்களை எடுத்தார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளோடு வந்த இவை சரியான வெற்றியை பெற்று தரவில்லை. அதே நேரத்தில் படத்தினுடைய பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்பட்டது.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு முதலில் இசையமைத்தது யுவன் ஷங்கர் ராஜா தான். ஆனால் எதிர்பாராத சில திருப்பங்களால் ஜி.வி. இசையமைக்க நேர்ந்தது. அதன் பின்னர் வந்த மயக்கம் என்ன படத்தில் இவரே கமிட் செய்யப்பட்டார்.
இரண்டு படங்களிலும் செல்வரகவனுடன் பணியாற்றியது மிகுந்த உற்சாகத்தை தந்தாம். அதோடு வேலை வாங்குவதில் கெட்டிக்காரர் செல்வராகவன் என தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார் ஜி.வி. எத்தனை நாட்கள் ஆனாலும் அவர் தன்னுடனே தங்கி இருந்து தன்னன வேலை வாங்கினார்.
இசை கம்போசிங்கின் போது நீங்க போயிட்டு வாங்க, நான் டியூன் போட்டு வைக்கிறேம் இசையமைப்பை எல்லாம் முடிச்சு வைக்கிறேன்னு பிரகாஷ் குமார் எவ்வளவோ சொல்லியும் இல்லை, இல்லை நானும் உங்க கூட தான் இருப்பேன் என சொல்லி அடம் பிடித்தாராம். அதேபோல வேலை முடிந்த உடனே முடிந்த பிறகு தான் அவர் வெளியேறினாராம். அப்படி தனது வேலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தீர்க்கமாக செயல் படக்கூடியவராம் செல்வராகவன்.
பணியாற்றிய காலங்களை தன்னால் என்றும் மறக்க முடியாது என சொல்லிய ஜி.வி. பிரகாஷ். கிட்டத்தட்ட தான் ஒரு அடிமை என்ற எண்ணத்தை வரவழைத்து விட்டது அந்த நேரத்தில் என சிரிப்பு பொங்க சொல்லி இருந்தார்…