“தீனா” படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆக்சன் ஹீரோவாக ‘அஜீத் குமார்’ இந்த படத்தில் நடித்திருப்பார். இதன் பிறகு இந்த கூட்டணி இணையவே இல்லை. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய “கஜினி”, “ஏழாம் அறிவு” படங்கள் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களின் கேரியரையே புரட்டிப்போட்டது.

மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த், “ரமணா” படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்தார். “கத்தி”, “துப்பாக்கி”, ‘சர்கார்” என விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய படமான “தர்பார்” வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷனை பெற்றுத் தந்தது.
வித்தியாசமான கதை அம்சங்களுடன் களம் வந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் நல்லதொரு வரவேற்பை வழங்கினர். இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றி சாதனைகளை படைத்த ஏ.ஆர்.முருகதாஸ் தனது தமிழ் மொழி படங்களை அப்படியே இந்தி, தெலுங்கில் அங்குள்ள பிரபல நடிகர்களை வைத்து மீண்டும் இயக்கினார்.
சில படங்கள் எதிர்பார்த்த முடிவுகளை தராமல் போனதும் உண்டு. இவர் பாலிவுட் படங்களுக்கே தற்பொழுது அதிக முன்னுரிமை கொடுத்து வருகிரார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில் சல்மான்கானுக்காக ஒரு கதையை தயார் செய்து அதற்கான வேலைகளில் தற்போது மும்மூரமாக ஈடுபட்டு வருகிறார்.

‘ரம்ஜான்’ பண்டிகையை குறிவைத்து சல்மான் கான் தனது படத்தினுடைய அறிவிப்பு ஏதாவது ஒன்றை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ‘ரம்ஜான்’ தினமான இன்று ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கான் இணையும் படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டது. “சிக்கந்தர்” என பெயரிடப்படுள்ள இந்த படம் இப்பொழுதே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.