Connect with us

எங்கேயோ பாத்த மாதிரியே இருக்குள்ளே…அஹா இது அதுல்லே…

cinema news

எங்கேயோ பாத்த மாதிரியே இருக்குள்ளே…அஹா இது அதுல்லே…

ஒரு படம் வெற்றியடைய வேண்டுமானால் படத்தின் கதை நன்றாக இருக்க வேண்டும். அதோடு திரைக்கதையும் சரியாக அமைந்திருக்க வேண்டும். இதைத்தவிர அந்த படத்தில் நடிக்கும் நாயகர்கள், நாயகிகளை பொருத்துமே இருக்கும்.

ஆனால் படத்தை பற்றி சொன்னதுமே முதலில் அதிக கவனம் பெறுவது படத்தினுடைய பெயரும் கூடவே. அந்த அளவிற்கு படத்தின் பெயரும் வலுவாக இருத்தல் வேண்டும். சில,பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றியடைந்த படங்களின் பெயர்களில் பல படங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான “நாடோடி மன்னன்” பட பெயரை சரத்குமார் தனது படத்திற்கு வைத்திருந்தார். மீனாவுடன் அவர் இணைந்து நடித்த இந்த படம் எம்.ஜி.ஆரின் படம் அடைந்தது போன்ற வெற்றியை பெறாவிட்டலும், ஒரளவிலான வரவேற்பினை பெற்றிருந்தது.

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த “ராஜா” படத்தினுடைய பெயரை அஜீத் தனது படத்திற்காக பயன்படுத்தியிருப்பார்.

raja

raja

ஜோதிகா, பிரியங்கா திரிவேதி, வடிவேலு நடித்து வெளிவந்திருந்தது அஜீத்ன் “ராஜா”. தனுஷின் “உத்தமபுத்திரன்” பெயரும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படத்திற்கு சூட்டப்பட்ட பெயர்தான்.

கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றியடைந்த “அபூர்வ சகோதரர்கள்” பெயரும் முன் னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தான். அதேபோல “தசாவதாரம்” என்ற கமல் படப்பெயரிலும் பழைய படம் ஒன்று வெளியாகி உள்ளது.சொல்லப்போனால் அந்த படத்தின் பெயரைத்தான் கமல்ஹாசன் தனது படத்திற்கு வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் “வேட்டைக்காரன்” படபெயரிலேயே வெளிவந்தது விஜய், அனுஷ்கா நடித்திருந்த “வேட்டைக்காரன்”. சத்யராஜ் நடித்திருந்த “ஜீவா” என்ற பெயரிலேயே சமீபத்தில் ஒரு படம் வெளிவந்தது. விஷால், நயன்தாரா நடித்திருந்த “சத்யம்” படத்தினுடைய பெயரும் பழைய படம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது தான்.சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா” படத்தின் பெயரும் இதே போன்றது தான்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்து வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் பெயர் “சர்வர் சுந்தரம்”, இதே பெயரில் சந்தானம் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் படம் இது.

More in cinema news

To Top