என்னது இவங்க படமெல்லாம் ஒருவருஷம் ஓடுச்சா?…இன்றைக்கும் மவுசு குறையாத படங்களாச்சே இதெல்லாம்!…

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ‘ஏழிசை மன்னர்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட எம்.கே.டி.தியாகராஜ பாகவதர் நடித்த “ஹரிதாஸ்” படம் கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1944ல் வெளியான இந்த படம் 1945,  1946 தீபாவளி பண்டிகையும் கடந்து  ஓடியதாம்.

ராதிகாவின் முதல் படமான “கிழக்கே போகும் ரயில்”  படமும் மிக பெரியதொரு சாதனையை தனக்குள்ளே வைத்துள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர் நடிக்க பாஞ்சாலி என்ற பெயரில் நடித்தார் ராதிகா. இந்த படம் கிட்டத்தட்ட 385 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்திருந்தது.

T.R. Radhika
T.R. Radhika

பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான டி.ராஜேந்தரின் முதல் படமான “ஒரு தலை ராகம்” கிட்டத்தட்ட 375 நாட்கள அதாவது ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. படத்திற்கு பக்க பலமாக அமைந்தது அதன் பாடல்கள். அது போக படத்தில் வரும் உருக்கமான வசனங்களுமே.

பாலு மஹேந்திரா கமல், ஸ்ரீதேவியை வைத்து இயக்கிய “மூன்றாம் பிறை” படமும்  ஒரு வருடத்தை தியேட்டர்களில் நெருங்கியது. கே.ஜே .யேசுதாஸ் பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடல் எங்காவது ஒலித்தால் அதனை கேட்க நம் காதுகள் இன்றும் மறுக்காது.

“கரகாட்டக்காரன்” ராமராஜனின் வாழ் நாள் சாதனை படங்களில் ஒன்று. வெற்றி விழாக்கள் நடத்தப்பட்டு, நடத்தப்பட்டே சோர்வை தந்த படம் எனக்கூட சொல்லலாம் தயாரிப்பாளர்களுக்கு. இதுவும் ஒரு வருடம் கடந்து வெள்ளித்திரையில் வலம் வந்த படம்.

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்து வெளியான “சின்னத்தம்பி” ரஜினியின் மன்னன் படத்தில் கூட “சின்னத்தம்பி” யின் வெற்றியை கொண்டாடும் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.
இது போல ஒரு வருடம் ஓடுமா இன்றைய கால படங்கள்? என சவால் விடும் அளவிற்கு அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த படங்கள் இவைகள் எல்லாம்.