மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். மலையாள நடிகர் என்று சொல்லி இவரை தமிழ் சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து விட முடியாது இவரை. ஏராளமான நேரடி தமிழ் படங்களில் நடித்து இங்கேயும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
பிரபுவுடன் இவர் நடித்திருந்த “சிறைச்சாலை” படத்தில் டாக்டராக வந்திருந்தார். யதார்த்தமான அந்த நடிப்பு ஒரு வேளை வேறு யாரும் இதில் நடித்திருந்தால் இப்படி இருந்திருக்காது என சொல்லவைக்கும் விதமாகத்தான் தனது ஃபர்பாமெஸை காட்டியிருந்தார். மலையாளம் கலந்த தமிழை இவர் பேசுவதும் இவரின் பலமாக பார்க்கப்படுகிறது.

“ஜில்லா” படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். படத்தில் இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் போட்டியும், ‘சிவனும் சக்தியும் சேர்ந்து வந்த மாசுடா’ பாடல் பொறி பறக்கவிட்டது. தியேட்டர்களில். உலக நாயகன் கமல்ஹாசனுடன் “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருப்பார். மாறன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் கமல்ஹாசனுடன் போட்டி போட்டிருந்தார் நடிப்பதில்.
ரஜினியுடன் சமீபத்தில் “ஜெயிலர்” படத்தில் வந்திருப்பார். வித்தியாசமான முடி, கூளிங் கிளாஸ் என மாஸாக காண்பிக்கப்பட்டார். ரஜினி சொன்னதை தட்ட முடியாமல் இவர் அவருக்கு உதவி செய்வது தான் அந்த படத்தில் கொடுக்கப்பட்ட் ரோல். குறைவான காட்சிகளில் மட்டுமே படத்தில் நடித்திருந்தாலும், வேற லெவெல் சீன்களாகத்தான் அமைந்தது “ஜெயிலர்” படம் இவருக்கு.
மல்லுவுட் மட்டும் இவரை கொண்டாடவில்லை கோலிவுட்டும் தான் இவரது பிறந்த தினத்தை சிறப்பித்து வருகிறது. இந்திய ராணுவத்தில் தனது சேவையை செய்துள்ளார். 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019ம் ஆண்டில் பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார் மோகன்லால்.