cinema news
மிஷ்கினை இசையால் மிரட்டிய ஏ ஆர் ரகுமான்?… இருந்தாலும் இளையராஜாவை விட்டுக் கொடுக்க மனசே வரலையாம்!…
மிஷ்கின் தமிழ் பட இயக்குனர்களின் சற்று மாறுபட்ட கதைகளை வைத்து படம் எடுக்கக் கூடியவர். இவரது படங்கள் அதிகமாக த்ரில்லர்களாக தான் அமைந்திருக்கும். இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் ஆன இவர் அவருடைய ரசிகர் மன்றத்திலும் இருந்து வந்திருக்கிறார். இளையராஜா தனது இசையால் தமிழ் சினிமாவை ஆண்டு வந்த நேரத்தில் திடீரென உள்ளே புகுந்து மக்களை மயக்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
இளயராஜாவின் சினிமா வாழ்வில் சிறிய தொய்வு ஏற்படத்துவங்கியதாம் ஏ.ஆர்.ரகுமான் தலை தூக்கிய பினனர். மேற்கத்திய இசையை போலவே கருவிகளின் ஆதீக்கம் அதிகமாக ரகுமான் இசையில் காணப்பட்டாலும் அவரது பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டியது.
இளையயராஜாவிலிருந்து முற்றிலும் மாறு பட்ட வடிவில் தான் ரகுமானின் இசை அமைந்தது. ஆனாலும் நாளுக்கு, நாள் இவரது புகழ் வளர்ந்து கொண்டே இருந்தது. இளையராஜாவின் இசையை விரும்புபவர்கள் கூட இவரது பாடல்களை கேட்க, அவரை நினைக்க தவறியது கிடையாது அந்த நேரத்திலிருந்தே.
ரகுமானின் இசையில் வெளிவந்த பாடல்களை கேட்டு பிரமித்து போயிருக்கிறாராம் இயக்குனர் மிஷ்கின். ஆனாலும் அவர் இளையராஜாவின் ரசிகராச்சே அதனால் அவருடைய நண்பர்களிடம் இளையராஜாவை விட்டுக் கொடுக்காமலே பேசுவாராம்.
அவரது நண்பர்கள் எல்லாம் மிஷ்கினை பார்த்து ‘மார்டன் ட்ரெண்டுக்கு வா’ என சொல்லும் பொழுது எல்லாம், என்ன இருந்தாலும் இளையராஜா, இளையராஜா தான் என அவர்களிடம் இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கிவிட்டும், அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவாராம்.
ஆனால் நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நேரத்தில் வாக்-மேன் கருவியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை கேட்டு மகிழ்வாராம்.ஏ.ஆர்.ரகுமான் கடவுள் கொடுத்த பரிசு. அவருடைய இசைத்திறமை அந்த அளவிற்கு தன்னை ஆச்சரியப்பட வைத்தது எனவும் சொல்லி இருக்கிறார் மிஷ்கின்.